பொய்யான வாக்குறுதிகளை அளித்து தி.மு.க வெற்றிபெற்று மக்களை ஏமாற்றுகிறது- எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு..!

 பொய்யான வாக்குறுதிகளை அளித்து தி.மு.க வெற்றிபெற்று மக்களை ஏமாற்றுகிறது- எஸ்.பி.வேலுமணி  குற்றச்சாட்டு..!

தமிழகம் முழுவதும் விடுபட்ட பஞ்சாயத்து இடைத்தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது,அதன் தொடர்ச்சியாக பொள்ளாச்சி அடுத்துள்ள ஆனைமலை ஒன்றியத்திற்குட்பட்ட திவான்சாபுதூர் ஊராட்சி மன்றத் தலைவர் இறந்த விட்ட காரணத்தால் அங்கு இடைத்தேர்தல் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சரோஜினி நியமிக்கப்பட்டுள்ளார். வேட்பாளரை ஆதரித்து அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி திவான்சா புதூர்,கணபதி பாளையம்,பூச்சனாரி பகுதிகளில்பிரச்சாரம்மேற்கொண்டார்,பொதுமக்கள் மத்தியில் பேசுகையில் திமுக ஆட்சிக்கு வருவதற்கு குபொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றியது,,திமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் நீட் தேர்வுனால்மூன்றுமாணவ, மாணவிகளை இழந்துள்ளோம், நீட் தேர்வு,கூட்டுறவுக் கடன் தள்ளுபடி,மாத குடும்பத் தலைவிக்கு ரூ1000 வழங்கும் நிவாரணத் தொகை எனபொய்யான வாக்குறுதிகளை அளித்து பொதுமக்களை ஏமாற்றி வருகின்றனர்.மேலும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குகளை பதிவு செய்து திமுக மிரட்டுவதால் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வழியில் வந்த நாங்கள் எதற்கும் அஞ்சமாட்டோம் சட்டப்படி வழக்கு சந்திப்போம் எனபொதுமக்கள் மத்தியில் பேசினார். இதில் வால்பாறை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி, ஒன்றியா பெருத் தலைவர் சாந்திதேவி கார்த்திகேயன். ஆனைமலை மேற்கு ஒன்றிய செயலாளர் கார்த்திக் அப்புசாமி, GK சுந்தரம்,வால்பாறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு,கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணகுமார்மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News Express Tamil

Related post

error: Content is protected !!