நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சியில் தி.மு.க., எம்.எல்.ஏ.வும், ஒன்றிய செயலாளரும் இடையே அடிதடி.! மக்கள் தப்பி ஓட்டம்..!

 நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சியில் தி.மு.க., எம்.எல்.ஏ.வும், ஒன்றிய செயலாளரும் இடையே அடிதடி.! மக்கள் தப்பி ஓட்டம்..!

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே கொரோனா நிவாரண நிதி வழங்கும் நிகழ்வில் திமுக எம்.எல்.ஏ.வும், ஒன்றிய செயலாளருக்கும் இடையே அடிதடி நடந்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழக அரசு நிவாரண நிதியை அறிவித்தது. இதனை திமுக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அமைச்சர்கள் மற்றும் கவுன்சிலர்கள் வழங்கி வருகின்றனர். ஒரு சில இடங்களில் யார் முதலில் வழங்குவது என்ற சண்டையும் வருகிறது.

இந்நிலையில், அதே போன்ற நிகழ்வு உளுந்தூர்பேட்டை அருகே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக எம்.எல்.ஏ., ஒருவர் தனது மாண்பை மறந்து விட்டு தனது சக கட்சி நிர்வாகிகளுடன் மல்லுக்கட்டிய சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சேர்ந்தநாடு பகுதியில் கொரோனா நிதி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் எம்.எல்.ஏ., மணிகண்ணன் கலந்து கொண்டார். இதனை விரும்பாத அப்பகுதி திமுக ஒன்றிய செயலாளர் வசந்தவேல் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

ஒரு கட்டத்திற்கு பின்னர் வாக்குவாதம் முற்ற, ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி கொண்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அங்கிருந்து ஓட்டம் பிடிக்க தொடங்கினர். ஆளும் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ., மற்றும் ஒன்றிய செயலாளர் ஒருவருக்கு ஒருவர் வீதியில் சண்டை போட்டுக் கொண்ட சம்பவம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News Express Tamil

Related post