கொரோனாவின் கோரதாண்டவம் ஓயாத நிலையில்: அடுத்து பேரதிர்ச்சியாக பறவை காய்ச்சல்

 கொரோனாவின் கோரதாண்டவம் ஓயாத நிலையில்: அடுத்து பேரதிர்ச்சியாக பறவை காய்ச்சல்

கொரோனாவின் கோரதாண்டவம் இன்னமும் ஓயாத நிலையில் அடுத்து ஒரு பேரதிர்ச்சியாக பறவைகாய்ச்சலும் வந்திருக்கிறது. டெல்லியில் ஒரு சிறுவன் பறவை காய்ச்சலால் உயிரிழந்துள்ளான். இதையடுத்து சிறுவனுக்கு சிகிச்சயளித்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

எச்5 என்8 என்ற வைரஸ் பறவைகளிடம் இருந்து மனிதர்களையும் தாக்குகிறது. இதனால் உயிரிழப்புகள் ஏதும் ஏற்பட வாய்ப்பில்லை என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், சிறுவன் உயிரிழந்துள்ளான்.

அரியானா மாநிலத்தை சேர்ந்த அந்த 11 வயது சிறுவனுக்கு திடீரென்று காய்ச்சல் அதிகமானதால், மூச்சுத்திணறலும் இருந்ததால் சிகிச்சை அளித்தும் குணமடையாததால், கடந்த 2ம் தேதி அன்று டெல்லி எய்ம்ஸ் மருத்துமனையில் சேர்த்துள்ளனர்.

சிறுவனுக்கு நடந்த சோதனையில் எச்5 என்8 வைரஸ் தாக்கியிருப்பது தெரியவந்தது.

தீவிர சிகிச்சை அளித்தும் சிறுவன் உயிரிழந்துள்ளான். இதையடுத்து பறவைகள் எங்கேனும் இறந்து கிடந்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தேசிய நோய் கட்டுப்பாடு மையம் அறிவுறுத்தியுள்ளது. இந்த வைரஸ் கண், மூக்கு, வாய், சுவாசம் வழியாக பரவும் என்பதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் தாக்கினால் காய்ச்சல், சளி, தொண்டை வலி, உடல் வலி, தலைவலி, கண்கள் சிவப்பாகுதல், மூச்சு விடுவதில் சிரமங்கள் போன்ற அறிவுகுறிகள் ஏற்படும் என்றும் தேசிய நோய் கட்டுப்பாடு மையம் அறிவுறுத்தியுள்ளது

News Express Tamil

Related post