தனியார் மருத்துவமனைகளுக்கான கொரோனா தடுப்பூசி கட்டணம்: மத்திய அரசு விலை நிர்ணயம்

 தனியார் மருத்துவமனைகளுக்கான கொரோனா தடுப்பூசி கட்டணம்: மத்திய அரசு விலை நிர்ணயம்

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுதப்பட்டு வருகின்றன. பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின், சீரம் நிறுவனத்தின் கோவிஷில்டு ஆகிய தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தபட்டு வருகிறது. இந்த நிறுவனங்கள் தயாரிக்கும் தடுப்பூசிகளில் 50 சதவிகிம் மத்திய அரசுக்கும், 50 சதவிதம் மாநில அரசுகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆனால், தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி செலுத்த அதிகளவில் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்தது.

இந்த நிலையில் தனியார் மருத்துவமனைகளுக்கான தடுப்பூசியின் விலையை நிர்ணயம் செய்துள்ளது மத்திய அரசு.

அதன்படி, ஜிஎஸ்டி வரி, சேவைக் கட்டணம் உள்பட கோவிஷீல்டு தடுப்பூசிக்கு 780 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கோவாக்சின் தடுப்பூசிக்கு 1,410 ரூபாயும், ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசி 1,145 ரூபாய் எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் சேவைக் கட்டணமாக 150 ரூபாயும் அடங்கும்.

News Express Tamil

Related post