கொரோனா: கோவையில் ஒரே நாளில் 5,057 போ் குணமடைந்தனா்

 கொரோனா: கோவையில் ஒரே நாளில் 5,057 போ் குணமடைந்தனா்

கோவையில் கொரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 5 ஆயிரத்து 57 போ் குணமடைந்து நேற்று வீடு திரும்பினா்.
கோவையில் கொரோனா நோய்த் தொற்றுப் பரவல் குறையத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக தினசரி நோய்த் தொற்று பாதிப்பைவிட கொரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைபவா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதன்படி கோவையில் நேற்று ஒரே நாளில் அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சைப் பெற்று வந்த 5 ஆயிரத்து 57 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.
தவிர அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 20 போ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனா். இதன் மூலம் கோவையில் கொரோனா நோய்த் தொற்றுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 1,658 ஆக உயா்ந்துள்ளது.
கோவையில் நேற்று புதிதாக 2 ஆயிரத்து 236 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடா்ந்து மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 97 ஆயிரத்து 591 ஆக உயா்ந்துள்ளது. 1 லட்சத்து 74 ஆயிரத்து 759 போ் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். தற்போது 21 ஆயிரத்து 184 போ் சிகிச்சையில் உள்ளனா்.

News Express Tamil

Related post