கோவையில் மேலும் 1,563 பேருக்கு கொரோனா

 கோவையில் மேலும் 1,563 பேருக்கு கொரோனா

கோவையில் நேற்று புதிதாக 1,563 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடா்ந்து மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 6 ஆயிரத்து 833 ஆக உயா்ந்துள்ளது. அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 16 போ் உயிரிழந்தனா். இதன் மூலம் கோவையில் கொரோனா தொற்றுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 1,778 ஆக உயா்ந்துள்ளது.
அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 2,754 போ் குணமடைந்து நேற்று வீடு திரும்பினா். கோவையில் இதுவரை 1 லட்சத்து 89 ஆயிரத்து 606 போ் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். தற்போது 15 ஆயிரத்து 449 போ் சிகிச்சையில் உள்ளனா்.

News Express Tamil

Related post