கோவையில் வங்கி கடன் வசூல் செய்வதில் மோதல் ; இருவர் படுகாயம்

 கோவையில் வங்கி கடன் வசூல் செய்வதில் மோதல் ; இருவர் படுகாயம்

கோவை அவிநாசி ரோடு கோல்ட்வின்ஸ் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவர் செல்லக்குட்டி என்பவரின் மகன் லோகநாதன் (32 ).இவர் ஆர் எஸ் புரம் பகுதியில் உள்ள தனியார் வங்கியில் 27 ஆயிரம் ரூபாய் தனது பைக்கிற்காக கடன் வாங்கியிருந்தார். இதில் 5 ஆயிரம் ரூபாயை கடந்த 17 மாதங்களாக செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று வங்கியில் இருந்து வந்த இரண்டு பேர் லோகநாதன் பணிபுரிந்து வரும் நிறுவனத்திற்கு சென்று லோகநாதனை அழைத்து பணத்தை தருமாறு கூறியுள்ளனர். அதற்கு லோகநாதன் தான் ஆன்லைன் மூலம் பணத்தை செலுத்தி  விடுவதாகவும் லோன் முடிப்பதற்கான சான்றிதழை கொடுக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு வங்கியில் இருந்து வந்திருந்த இருவர் லோகநாதன் இடம் தகராறில் ஈடுபட்டனர். தகராறு முற்றிய நிலையில் தகாத வார்த்தைகள் பேசியதோடு லோகநாதனை அடித்து கீழே தள்ளியுள்ளனர்.  அப்போது லோகநாதன் நிறுவனத்தில் பணிபுரிந்த பணிபுரியும் சுரேஷ் என்பவர் சண்டையை தடுக்க முயன்றார் .அப்போது வங்கியில் இருந்து வந்திருந்தவர்கள் அங்கிருந்த கற்களை எடுத்து லோகநாதன் மற்றும் சுரேஷ் இருவரையும் கடுமையாக தாக்கினர். இதை பார்த்த அருகில் உள்ளவர்கள காயம் அடைந்த லோகநாதன் சுரேஷ் ஆகிய இருவரையும் மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து லோகநாதன் அளித்த புகாரின் பெயரில் வங்கியில் இருந்து வந்திருந்த விக்னேஷ், அஸ்வின் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல வங்கி ஊழியர்கள் கடன் வசூலிக்க சென்ற போது தங்களை தாக்கியதாக பீளமேடு போலீசில் லோகநாதன் மற்றும் மூவர் மீது புகார் அளித்தனர் .இவ்விரண்டு வழக்குகளையும் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News Express Tamil

Related post

error: Content is protected !!