மாநிலங்களவை உறுப்பினராக மீண்டும் தேர்வாகிறார் நிர்மலா சீதாராமன்..!!
கோவையில் அக்கா, தங்கை திடீர் மாயம்..!

கோவை : ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் சுஜா ராம். இவர் கோவை தாமஸ் வீதியில் கடந்த 30 ஆண்டுகளாக குடும்பத்துடன் தங்கியிருந்து பேப்பர் வியாபாரம் செய்து வருகிறார் .இவருக்கு 3 மகள்கள் உள்ளனர்.இவரது மூத்த மகளுக்கு திருமண ஏற்பாடுகள் செய்வதற்காக சுஜாராம் மனைவி தனது மூத்த மகளை அழைத்துக் கொண்டு ராஜஸ்தான் மாநிலம் சென்றிருந்தார்,.இங்கு 2-வது மகளும் , 3-வது மகளும் இருந்தனர். கடந்த 20ஆம் தேதி சுஜா ராம் கடைக்கு சென்று விட்டு இரவில் வீடு திரும்பினார்.அப்போது வீட்டின் கதவு பூட்டப்பட்டிருந்தது. சாவியை பக்கத்து வீட்டில் கொடுத்துவிட்டு அக்கா தங்கை இருவரும் எங்கோ மாயமாகி விட்டனர். செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இது குறித்து வெரைட்டி ஹால் ரோடு காவல் நிலையத்தில் சுஜாராம் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார்கள்.