கோவையில் வீட்டில் கள்ளச்சாராயம் பதுக்கி வைத்திருந்தவர் கைது 3 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்

 கோவையில் வீட்டில் கள்ளச்சாராயம் பதுக்கி வைத்திருந்தவர் கைது 3 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்

கோவை, சூலூர் அருகே வாகராயம் பாளையம் கள்ளச்சாராயம் பதுக்கி வைத்திருந்த வரை கருமத்தம்பட்டி போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 3 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

கருமத்தம்பட்டி அடுத்த வாகராயம்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக கருமத்தம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது தகவலின்பேரில் கருமத்தம்பட்டி காவல் ஆய்வாளர் ராஜதுரை தலைமையில் வாகராயம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது விற்பனை செய்வதற்காக 3 லிட்டர் சாராயம் வைத்திருந்தது தெரியவந்தது இதனையடுத்து சாராயம் பதுக்கி விற்பனையில் ஈடுபட்டு வந்த வாகராயம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணி (44) என்பவரை போலீசார் கைது செய்து விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்த போலீசார் மேலும் கள்ளச்சாராயம் எங்கே இருந்து வாங்கி வரப்பட்டது என்பது குறித்து மேற்படி நபரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

News Express Tamil

Related post

error: Content is protected !!