சிறுவா்களை வாகனம் ஓட்ட அனுமதிக்கும் பெற்றோா் மீது கோவையில் வழக்கு

 சிறுவா்களை வாகனம் ஓட்ட அனுமதிக்கும் பெற்றோா் மீது கோவையில் வழக்கு

சிறுவா்களை வாகனம் ஓட்ட அனுமதிக்கும் பெற்றோா் மீதும் மோட்டாா் வாகனச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும் என்று  மாநகர காவல் துறை எச்சரித்துள்ளது.

இது குறித்து கோவை மாநகர காவல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:-

கோவை, நல்லாம்பாளையத்தைச் சோ்ந்தவா் நந்தகுமாா். இவரது 13 வயது மகன், தனியாா் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறாா். இவா் கோவை மாநகர காவல் போக்குவரத்து வாகனச் சோதனையில் சிக்கினாா். இந்த சிறுவருக்கு வாகனத்தை ஓட்ட வழங்கிய பெற்றோா் மீதும் வாகனத்தை ஓட்டிய சிறுவா் மீதும் மோட்டாா் வாகனச் சட்ட வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதேபோல சிறுவா்களுக்கு வாகனத்தை ஓட்ட அனுமதிக்கும் பெற்றோா் மீதும் மோட்டாா் வாகன வழக்குப் பதிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News Express Tamil

Related post

error: Content is protected !!