கோவையில் ஹாஸ்டல் பெண்ணை செருப்பால் அடித்து பணம் பறிப்பு: 12 பெண்கள் மீது வழக்கு

 கோவையில் ஹாஸ்டல் பெண்ணை செருப்பால் அடித்து பணம் பறிப்பு: 12 பெண்கள் மீது வழக்கு

கோவைப்புதூர் சிறுவாணி நகர் பகுதியைச் சேர்ந்த சரவணமூர்த்தி என்பவரின் மனைவி நிர்மலா( 36). இவருக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் ஆகி கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து குனியமுத்தூர் பகுதியில் உள்ள லேடீஸ் ஹாஸ்டலில் தங்கி இருந்தார். இந்நிலையில் லேடீஸ் ஹாஸ்டலில் தங்கியிருந்த லதா மற்றும் வேறு சில பெண்கள் நிர்மலாவிடம் பணம் கேட்டுள்ளனர். அதற்கு நிர்மலா தன்னிடம் பணம் இல்லை என்று கூறியிருக்கிறார். இதையடுத்து லதா மற்றும் ஹாஸ்டலில் இருந்த 12 பெண்கள் இணைந்து நிர்மலாவை தரக்குறைவாக பேசியதோடு மட்டுமலலாமல் செருப்பால் அடித்து காயப்படுத்தினர் .மேலும் நிர்மலாவிடம் இருந்த நான்காயிரம் ரூபாய் பணம் மற்றும் இரண்டு மோதிரங்களை பறித்துக் கொண்டனர். இதுகுறித்து நிர்மலா குனியமுத்தூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பெயரில் குனியமுத்தூர் போலீசார் மற்றும் அவருடன் இணைந்து தாக்குதல் நடத்தி பணம் மற்றும் நகை பறித்த லதா மற்றும் 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News Express Tamil

Related post