மலைவாழ் மக்களின் 30 ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றிய கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன்..!

 மலைவாழ் மக்களின் 30 ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றிய கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன்..!

கோவையில் 30 ஆண்டு காலமாக குடியிருந்து வரும் 15 மலைவாழ் மக்கள் குடும்பங்களுக்கு மாவட்ட ஆட்சியர் சமீரன் நடவடிக்கையினால் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சமீரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, “அரசை தேடி மக்கள் சென்ற நிலை மாறி, பொதுமக்களின் குறைகளை தீர்க்க மக்களை தேடி அரசு என்ற நிலையில் பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இதன்படி, கோவை மாவட்டம் மாவுதம்பதி பகுதியில் கடந்த மாதம் 27ஆம் தேதி கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது”.

“அப்போது புதுப்பதியில் குடியிருந்து வரும் மலைவாழ் மக்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக 45 குடும்பங்கள், புதுப்பதி நத்தம் என வகைப்பாடு செய்யப்பட்ட பகுதிகளில் வீடுகள் கட்டி குடியிருந்து வருகின்றனர்.

இதில், 30 குடும்பங்களுக்கு ஏற்கனவே பட்டா வழங்கப்பட்டு உள்ளது. எஞ்சிய 15 குடும்பங்களுக்கு பட்டா வழங்கப்படாமல் உள்ளது என்றும், அவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது”.

“இதனை அடுத்து, வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியருக்கு இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. அதன் பேரில், கடந்த 12ஆம் தேதி மாவுத்தம்பதி, புதுப்பதி மலைவாழ் செட்டில்மெண்ட்டில் வாழும் 15 குடும்பங்களை சேர்ந்த மலைவாழ் மக்களுக்கு, வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. மேலும், இவர்களுக்கு ஊரக வளர்ச்சி முகமை மூலம் இலவச வீடுகள் கட்டிக்கொடுக்க வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது” என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

News Express Tamil

Related post