கோவை மாவட்ட ஆட்சியர் முன்னாள் நேர்முக உதவியாளர் வீட்டில் நகை கொள்ளை

 கோவை மாவட்ட ஆட்சியர் முன்னாள் நேர்முக உதவியாளர் வீட்டில் நகை கொள்ளை

கோவை தொண்டாமுத்தூர் விவேகானந்தர் நகர் பகுதியில் குடியிருப்பவர் ராமசாமி (78) , இவர் முன்னாள் மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளராக பணியாற்றியவர். இவருக்கு திருமணமாகி ரத்தினம் (75) என்ற மனைவி உள்ளார் . இவர்கள் மகன் பெங்களூரில் வேலை செய்து வருகிறார்.கணவன் மனைவி இருவரும் வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரானா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று கடந்த வாரம் வீடு திரும்பினர். தனிமைப்படுத்திக் கொள்ள இருவரும் தனித்தனி அறையில் தங்கள் தனிமை படுத்திக் கொண்டார்.

இந்த நிலையில் இன்று அதிகாலை 2 மணி அளவில் ராமசாமி வீட்டில் இரண்டு மர்ம நபர்கள் சமையல் அறை அருகே உள்ள கதவைத் திறந்து வீட்டிற்குள் நுழைந்து உள்ளனர். ராமசாமி தங்கியிருந்த அறையில் பூட்டிவிட்டு அருகில் அவரது மனைவி ரத்தினம் அறைக்குள் நுழைந்தனர். அங்கே தூங்கிக்கண்டிருந்த
ரத்தினத்தின் கழுத்திலுள்ள 8 1/2 பவுன் தங்க சங்கிலி , கையில் அணிந்திருந்த 3 பவுன் தங்க வளையலை வெட்டி எடுத்து தப்பினர். சத்தம் கேட்டு எழுந்த முதாட்டி சத்தம் போட்டு அருகே உள்ள கணவரின் அறையை திறந்து விட்டு விஷசயத்தை கூறினார். உடனடியாக இருவரும் தொண்டாமுத்தூர் காவல் நிலையம் சென்று தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிசிடிவி பதிவுகளை ஆராய்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

News Express Tamil

Related post