கோவை கல்லூரி மாணவியிடம் காதல் வலை வீசி பணம் பறித்த கும்பல்: தொடர் மிரட்டலால் மாணவி விஷம் குடித்து தற்கொலை

 கோவை கல்லூரி மாணவியிடம்  காதல் வலை வீசி  பணம் பறித்த கும்பல்: தொடர் மிரட்டலால் மாணவி விஷம் குடித்து தற்கொலை

கோவையில், கல்லுாரி மாணவியரை குறி வைத்து பழகி, மிரட்டி பணம் பறிக்கும் கும்பலிடம் சிக்கிய தனியார் கல்லுாரி மாணவி தற்கொலை செய்து கொண்டது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை, சிங்காநல்லுாரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் என் மகள் லாவண்யா (19) .இவர்  காளப்பட்டி ரோட்டில் உள்ள என் ஜி பி  கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பிகாம் படித்து வந்தார். இவருக்கும் சிவகங்கை மாவட்டம் மானா மதுரையைச் சேர்ந்த கேசவ குமார் என்ற விஜய் சேதுபதிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. கேசவ குமார் நவ இந்தியா பகுதியில் உள்ள இந்துஸ்தான் கல்லூரியில் விஸ்காம் படிப்பு படித்து வந்தார். கேசவ குமார் ராமானுஜம் நகர் பகுதியில் உள்ள மேன்சனில் தங்கியிருந்து வந்தார். அதே பகுதியில் லாவண்யாவின் வீடும் இருந்ததால் கல்லூரிக்கு செல்வதற்காக லாவண்யா பஸ் ஸ்டாப்பில் நிற்கும் போது

இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு பின்னர் அது காதலாக மாறியது. இதையடுத்து அவர்கள் பல இடங்களில் சுற்றி வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம்  லாவண்யா எலி மருந்தை குடித்து வீட்டில் வாந்தி எடுத்துள்ளார். இதையடுத்து அவரது பெற்றோர் இது குறித்து லாவண்யாவிடம் கேட்டபோது தான் கேசவ குமார் என்பவரிடம் பழகி காதலித்து வந்ததாகவும் அப்போது தனிமையில் இருந்தபோது எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டி தன்னிடம் இருந்து 35 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் இரண்டு சவரன் தங்க நகைகளையும் கிஷோர் பறித்துக் கொண்டதாக கூறினார்.மேலும்

மீண்டும், மீண்டும் கேசவகுமார் பணம், நகை கேட்க ஒரு கட்டத்தில் தான் பேசுவதை தவிர்த்த விட்டதாகவும் கூறியுள்ளார்.

இதையடுத்து கேசவகுமார் மற்றும் அவரது நண்பர்கள், பணம் கொடுக்கவில்லை என்றால், எங்களிடம் இருக்கும் புகைப்படம், வீடியோக்களை ஆபாசமாக மாற்றி, சமூக வலைதளங்களில் பதிவேற்றுவதாக மிரட்டியதால் தான் தற்கொலைக்கு முயன்றதாக லாவண்யா கூறியுள்ளார்.

இதனால் அதிர்ந்து போன கிருஷ்ணமூர்த்தி தனது மகளை உடனடியாக சிங்காநல்லூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். மருத்துவர்கள் இரண்டு நாட்கள் சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனில்லாமல் நேற்று லாவண்யா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கிருஷ்ணமூர்த்தி சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில

 சிங்காநல்லூர் போலீசார் கல்லூரி மாணவி லாவண்யாவின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து இணையதளத்தில் வெளியிடுவதாக மிரட்டிய கேசவ குமார் என்ற விஜய் சேதுபதி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கு முன்பும், இந்த மிரட்டல் கும்பல் குறித்து, போலீஸ் ஸ்டேஷன்களில் புகார்கள் அளிக்கப்பட்டுஉள்ளன. இந்த புகார்களை போலீசார் முறையாகவிசாரித்தால், பொள்ளாச்சிசம்பவம் போல், பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகலாம்.

News Express Tamil

Related post

error: Content is protected !!