கோவையை அசத்தும் இரண்டாம் வகுப்பு மாணவி : ஒரு மணி நேரத்திற்கு மேலாக கிணற்றில் யோகாசனம்

 கோவையை அசத்தும் இரண்டாம் வகுப்பு  மாணவி : ஒரு மணி நேரத்திற்கு மேலாக கிணற்றில் யோகாசனம்

கோவை , சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையத்தில் காளியப்பன் என்பவரின் மகள் சுகந்தி இவருடைய மகள் தியாமிகாசாய் (8) தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு தற்போது படித்து வருகிறார்.

இந்நிலையில் தியாமிகசாய்
தாத்தா காளியப்பன் மூலம் சிறுவயது முதல் தோட்டத்து கிணற்றில் நீச்சல் பழகி உள்ளார்.

இதனை தொடர்ந்து அவருடைய அப்பா பூவராகவன் மற்றும் அவரது தாய் சுகந்தி ஆகியோருடைய உந்துதலின் பேரில் யோகாசனங்கள் கற்றுக்கொண்ட சிறுமி
அதை கிணற்றில்
நீந்திய நிலையில் யோகாசனங்களை செய்து பார்த்துள்ளார்.

தொடர்ந்து கிணற்றில்
யோகாசனங்களை பழகிய சிறுமி
தற்போது ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக கிணற்றில் பத்மாசனம் செய்து அசத்தி வருகிறார்.

இதுகுறித்து பேசிய சிறுமி
தியாமிகசாய் கிணற்றில் தனது தாத்தா கற்றுக்கொடுத்த நீச்சல் மூலம் யோகாசனங்களை செய்வதாகும் நான்கு வகை ஆசனங்களை தற்போது கிணற்றில் செய்து வருவதாகும் வருங்காலத்தில் நீச்சல் துறையில் சாதனை செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

News Express Tamil

Related post