கோவை : கஞ்சா விற்ற வாலிபர் கைது

 கோவை : கஞ்சா விற்ற வாலிபர் கைது

கோவை, சிங்காநல்லூர் போலீசார் சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். சிங்காநல்லூர் அடுத்த கிருஷ்ணா காலனி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த வாலிபரை சோதனை செய்தனர். அப்போது அவரிடம் கஞ்சா பொட்டலங்கள் விற்பனைக்கு இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் ராமநாதபுரம் 80 அடி ரோடு பகுதியைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்பவரின் மகன் சந்தோஷ் (20 )என்பது தெரியவந்தது. மேலும் அவரிடம் இருந்து ஒரு கிலோ 350 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.

News Express Tamil

Related post