கோவை புலியகுளம் பகுதியில் அறை எடுத்து தங்கி தனியார் கல்லூரியில் படித்து வரும் மாணவர் நாசிப். இவருடன் 5 நண்பர்களும் தங்கி உள்ளனர். இந்நிலையில் நேற்று அங்கு வந்த மூன்று மர்ம நபர்கள் நாசிப் அறையின் கதவைத் தட்டி உள்ளனர். அறையை திறந்த பின் உள்ளே நுழைந்த மூவரில், ஒருவர் நாசிப்பின் கழுத்தில் கத்தியை வைத்துக்கொண்டு ...

குடத்திற்குள் தலை மாட்டிய ஆட்டை காப்பாற்றிய ஆடுகள் … கோவை சிவானந்தா காலனி பகுதியில் உள்ள கண்ணப்ப நகரில் மயானம் உள்ளது. கோவையிலேயே மிகப் பெரிய மயானம் இது. இதில் வேலை பார்ப்பவர் வீரபத்திரன். இவர் மயானத்திற்கு உள்ளேயே தங்கி இருந்து, ஆடுகளை வளர்ந்து வருகிறார். இந்நிலையில் ஒன்றைரை வயது உள்ள ஆட்டுக் குட்டி தண்ணீர் ...

டெல்லி : ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்களின் மாநாட்டிற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாகிஸ்தானை கடுமையாகச் சாடியுள்ளார். “ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாட்டின் வெளியுறவு அமைச்சராக இங்கு வந்துள்ள பூட்டோ சர்தாரி அதற்கேற்ப நடத்தப்பட்டார். பாகிஸ்தானின் முக்கிய ஆதாரமான பயங்கரவாதத்தை நியாயப்படுத்துபவர் மற்றும் பயங்கரவாதத்தின் செய்தித் தொடர்பாளர்” ...

கர்நாடகா சட்டமன்ற தேர்தலுக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள பிரதமர் மோடி பெங்களூரில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ள நிலையில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சட்டமன்ற தேர்தல் மே 10ம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரங்களும், தேர்தல் அறிவிப்புகளும் களைகட்டி வருகிறது. பாஜக – காங்கிரஸ் இடையே கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்க கடும் போட்டி நடந்து வருகிறது. ...

சூடானில் சிக்கியுள்ள குடிமக்களைக் காப்பாற்ற பெரிய நாடுகள் கூட முயற்சி செய்யாதபோது இந்தியா அதனை செய்ததாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் பல்லாரியில் நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமர் மோடி, பெரிய நாடுகள் கூட தங்கள் குடிமக்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபடவில்லை. ஆனால் இந்திய அரசு அந்த முயற்சிகளை தொடர்ந்து செய்து ...

சென்னை: வரும் 7ஆம் தேதி அல்லது 8ஆம் தேதி வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்பு இருப்பதால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மிக கனமழை பெய்யும் என்று சேலம் நாமக்கல் மற்றும் ...

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம், ராமநாதசுவாமி கோயில் கார் பார்க்கிங் வளாகத்திற்கு நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் சிலர் வெள்ளை நிற காரில் வந்துள்ளனர். காரை நிறுத்திவிட்டு சென்றவர்கள் திரும்பி வரவில்லை. அக்காரில் பயங்கர ஆயுதங்களுடன் கடத்தல் கும்பல் வந்திருக்கலாம். இவர்கள் ராமேஸ்வரம் தீவுப்பகுதியில் பதுங்கியிருக்கலாம் என்றும் தகவல் பரவியது. இதையடுத்து மத்திய புலனாய்வு துறை போலீசார் ...

ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான். மறக்க முடியாத குரல் இது; 2 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் மக்கள் பணிக்காக என்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டேன்; மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை நிறைவேற்ற முடியுமா? என என்னை நானே கேட்டுக்கொண்டபோது ...

குறைந்தது 20 மில்லியன்’ மக்களைக் கொன்று போட்ட கொரோனா வைரஸ் தொற்றுநோய், சுகாதார நெருக்கடி என்ற கட்டத்தை தாண்டி விட்டதாக உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் அறிவித்துள்ளார். இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு (WHO) வெளியிட்ட அறிக்கையில் அவர் இது தொடர்பாக விரிவாக தெரிவித்துள்ளார். COVID-19 தொற்றுநோய், மூன்று ...

கோவை மே 6 மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வு நாடு முழுவதும் நாளை ( ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது .இதில் கோவை மாவட்டத்தில் 7,127 பேர் நீட் தேர்வு எழுதுகிறார்கள் .இதற்காக 9 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த தேர்வு மையங்களுக்கு தனித்தனியாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டு தேர்வுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த தகவலை நீட் ...