கோவையில் வீட்டு உரிமையாளர் மனைவி குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியவர் மீது வழக்கு

 கோவையில் வீட்டு உரிமையாளர் மனைவி குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியவர் மீது வழக்கு

கோவை கரும்புக்கடை பகுதியைச் சேர்ந்த ஜெயினுலாபுதீன் என்பவரின் மனைவி கதீஜா (48). இவரது வீட்டில் அப்துல்லா என்பவர் குடியிருந்து வருகிறார். இந்நிலையில் அப்துல்லா வீட்டின் உரிமையாளர் கதிஜா குறித்து சமூக வலைதளங்களில் அவதூராக பதிவுகளை வெளியிட்டுள்ளார் .இதுபற்றி அறிந்த கதிஜா அப்துல்லாவிடம் கேட்டுள்ளார் .அதற்கு அப்துல்லா கதீஜாவை தரக்குறைவாக பேசி இருக்கிறார். இதுகுறித்து கதீஜா போத்தனூர் போலீசில் புகார் அளித்தார் .புகாரின் பேரில் போலீசார் அப்துல்லா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News Express Tamil

Related post