மாநிலங்களவை உறுப்பினராக மீண்டும் தேர்வாகிறார் நிர்மலா சீதாராமன்..!!
தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் பில்டிங் காண்ட்ராக்டர் தூக்கு போட்டு தற்கொலை..!

கோவை பக்கம் உள்ள விளாங்குறிச்சி வெற்றிவேலன் நகரை சேர்ந்தவர் நந்தகுமார் ( வயது 38) பில்டிங் கட்டுமான தொழில் செய்து வந்தார், கொரோனா ஊரடங்கால் கடந்த 2 ஆண்டுகளாக இவருக்கு தொழிலில் பெருத்த நஷ்டம் ஏற்பட்டது.இதனால் மனமுடைந்த நந்தகுமார் நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் மின் விசிறி கொக்கியில் வேட்டியை கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து அவரது மனைவி ஹேமலதா கோவில்பாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.