கோவையில் வெங்காய லோடு ஏற்றி வந்த லாரியில் கர்நாடகா மதுபான பாட்டில்கள் : லாரி ஓட்டுநர் தப்பி ஓட்டம்

 கோவையில் வெங்காய லோடு ஏற்றி வந்த லாரியில் கர்நாடகா மதுபான பாட்டில்கள் : லாரி ஓட்டுநர் தப்பி ஓட்டம்

சூலூர் அருகே உள்ள சுல்தான்பேட்டை பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றிருந்த வெங்காய லோடு ஏற்றி வந்த லாரியில் 80 ஆயிரம் மதிப்புள்ள கர்நாடக மாநில மதுபானங்கள் பறிமுதல் செய்து தப்பியோடிய லாரி ஓட்டுனர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

சூலூர் அடுத்த சுல்தான்பேட்டை அருகே உள்ள இடையர்பாளையம் பகுதியில் ஏராளமான வடமாநிலத்தவர்கள் கோழி பண்ணைகளில் தங்கி பணிபுரிந்து வருகின்றனர் இந்நிலையில் வட மாநிலத்தவர்களுக்கு சட்டவிரோதமாக கர்நாடகா மாநில மதுபானங்கள் லாரியில் கடத்தி வந்து விற்பனை செய்வதாக பொதுமக்கள் புகார் அளித்து வந்தனர் இந்நிலையில் நேற்று இரவு வெங்காய லோடு ஏற்றி வந்த லாரி ஒன்று காட்டுப் பகுதியில் நிற்பதாக சூலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது தகவலின்பேரில் சுல்தான்பேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் தலைமையில் போலீசார் அப்பகுதிக்கு சென்றனர் அப்போது போலீசாரை பார்த்ததும் லாரி ஓட்டுநர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார் இதனை அடுத்து அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியை சோதனை செய்ததில் அதில் பெரிய வெங்காயம் மற்றும் பூண்டு மூட்டைக்கு இடையில் சுமார் 80 ஆயிரம் மதிப்புள்ள கர்நாடகா மாநில மதுபான பாட்டில்கள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது இதனை அடுத்து அந்த லாரியை கைப்பற்றி அதில் இருந்த மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர் மேலும் லாரியை ஓட்டிவந்த ஓட்டுநர் தப்பியோடிய நிலையில் ஓட்டுநர் குறித்து விசாரணை மேற்கொண்டதில் சேலம் சங்ககிரி பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பதும் கர்நாடக மாநிலத்தில் இருந்து மதுபானங்களை விற்பனைக்காக கடத்தி வந்தது தெரியவந்தது இதனையடுத்து தப்பியோடிய லாரி ஓட்டுநர் சங்கரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

News Express Tamil

Related post