ஆக்கிரமிப்பின் பிடியில் கரடி சோலை வனப் பகுதி

 ஆக்கிரமிப்பின் பிடியில் கரடி சோலை வனப் பகுதி

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகரின் மையத்தில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது . இதில் கரடி சோலை அருவி கொடைக்கானலில் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இரண்டு ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கால் சுற்றுலா பயணிகள் யாரும் செல்லக்கூடாது என வனத்துறை தடை விதித்துள்ளது. இதற்கிடையில் இதனருகே குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்கள் ஏராளமாக உள்ளன கொரோனா ஊரடங்கால் மக்கள் நடமாட்டம் இல்லை. இந்த சூழலை பயன்படுத்தி சில விவசாயிகள் வனப் பகுதியை ஆக்கிரமித்து வருகின்றனர். மேலும் அத்துமீறி வனப்பகுதியில் மரங்களை அகற்றுவதும் வனப்பகுதி நிலங்களை தங்கள் நிலத்துடன் இணைப்பதும் என அரசுக்கு எதிராக செயல்படுகின்றனர். இதற்கு வனத்துறை அதிகாரிகளும் உடந்தையாக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இது பற்றி புகார் கூறினாலும் வனத்துறை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர் எனவே மாவட்ட நிர்வாகம் வனப்பகுதி ஆக்கிரமிப்பை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.‌..

News Express Tamil

Related post