News Express Tamil

பொய்யான வாக்குறுதிகளை அளித்து தி.மு.க வெற்றிபெற்று மக்களை ஏமாற்றுகிறது- எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு..!

தமிழகம் முழுவதும் விடுபட்ட பஞ்சாயத்து இடைத்தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது,அதன் தொடர்ச்சியாக பொள்ளாச்சி அடுத்துள்ள ஆனைமலை ஒன்றியத்திற்குட்பட்ட திவான்சாபுதூர் ஊராட்சி மன்றத் தலைவர் இறந்த விட்ட காரணத்தால் அங்கு இடைத்தேர்தல் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சரோஜினி நியமிக்கப்பட்டுள்ளார். வேட்பாளரை ஆதரித்து அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி திவான்சா புதூர்,கணபதி பாளையம்,பூச்சனாரி பகுதிகளில்பிரச்சாரம்மேற்கொண்டார்,பொதுமக்கள் மத்தியில் பேசுகையில் திமுக ஆட்சிக்கு வருவதற்கு குபொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றியது,,திமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் நீட் தேர்வுனால்மூன்றுமாணவ, […]Read More

நாட்டு வெடிகுண்டுகளை பயன்படுத்தி வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற ஒருவர் கைது- 7 பேருக்கு

கோவை மாவட்டம் காரமடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கணுவாய்ப்பாளையம் பகுதியில் சட்ட விரோதமாக நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக எஸ்.பி.செல்வநாகரத்தினத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.இதனையடுத்து காரமடை காவல் ஆய்வாளர் குமார் தலைமையில் உதவி ஆய்வாளர் நெல்சன்,காவலர் சுரேஷ்,தனிப்பிரிவு காவலர் விவின் உள்ளிட்டோர் அடங்கிய தனிப்படையினர் கணுவாய்ப்பாளையம் பகுதியில் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டு வந்தனர்.அப்போது,அப்பகுதியில் உள்ள தெற்குத்தோட்டம் பகுதியில் ஒரு வீட்டில் இருந்த இளைஞர் ஒருவர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றுள்ளார். இதனையடுத்து அவனை பிடித்து தீவிர […]Read More

இந்து முன்னணி நிர்வாகி மீது மர்ம நபர்கள் தாக்குதல்: மேட்டுப்பாளையத்தில் பெரும் பதற்றம்..!

மேட்டுப்பாளையம் இந்து முன்னணி நிர்வாகி மீது மர்மநபர்கள் தாக்குதல். மேட்டுப்பாளையம் பகுதியில் பதற்றமான சூழ்நிலை. மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகர்,டிஐஜி முத்துச்சாமி,எஸ்பி செல்வநாகரத்தினம் உள்ளிட்டோர் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் தீவிர ஆலோசனை. அசம்பாவிதங்களை தவிர்க்க 15 இடங்களில் போலீஸார் குவிப்பு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இந்து முன்னணி மேற்கு நகர செயலாளராக இருப்பவர் சந்திரசேகர். இவர் இன்று மாலை ஓடந்துறை நரிப்பள்ளம் சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் மேட்டுப்பாளையம் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது,அவரை பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் […]Read More

கடன் வாங்கி தருவதாக ரூ.8.8 லட்சம், 22 பவுன் நகை மோசடி செய்த

கோவையில் கடன் வாங்கி தருவதாக ரூ.8.8 லட்சம், 22 பவுன் நகை மோசடியில் ஈடுபட்ட தாய், மகள் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கோவை கவுண்டம்பாளையம் ராஜன்நகரை சேர்ந்தவர் கீதா(38). இவர் கோவை காட்டூர் போலீசில் ஒரு புகார் மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-கோவை காட்டூர் ராம்நகர் நஞ்சப்பன் தெருவில் எனது பெற்றோர் வசித்து வருகின்றனர். இருவரும் கேன்சர் நோயால் அவதிப்பட்டு வருகின்றனர். அவர்களை பார்க்க வீட்டுக்கு அடிக்கடி செல்லும்போது எனக்கு பக்கத்து […]Read More

டெய்லர் வீட்டில் கதவை உடைத்து 30 பவுன் நகை, ரூ.3.22 லட்சம் பணம்

கோவையில் டெய்லர் வீட்டில் கதவை உடைத்து 30 பவுன் நகை, ரூ.3.22 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கோவை குனியமுத்தூர் பிருந்தாவன் நகரை சேர்ந்தவர் முபாரக் அலி(48). டெய்லர் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் கரும்புக்கடையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர் நேற்று வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த உடைமைகள் சிதறிக் கிடநதன. பீரோவில் வைக்கப்பட்டிருந்த […]Read More

கோவையில் கள்ளக்காதலனுடன் ஓடி திரும்பிய பெண் தற்கொலை -2 குழந்தைகள் தவிப்பு..!

கோவை அடுத்த துடியலூர் இடையர்பாளையம் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் மனைவி மைதிலி(30). இந்த தம்பதியினருக்கு 12 வயதில் ஒரு மகனும், மகளும் உள்ளனர். இந்நிலையில், மைதிலிக்கும் அவரது உறவுக்கார வாலிபர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். இதனையறிந்த குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். ஆனால் இருவரும் கேட்கவில்லை. இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு மைதிலி அவருடன் வீட்டை விட்டு ஓடி விட்டார். குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் […]Read More

கோவையில் கஞ்சா விற்ற வாலிபர் கைது..!

கோவை சாய்பாபா காலனி அருகே உள்ள எருக்கம்பெனி அருகே சிலர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து சாய்பாபா காலனி போலீசார் தகவல் வந்த இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த கவுண்டம்பாளையத்தை சேர்ந்த மாரிச்செல்வம் (28) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.Read More

கிரிப்டோகரன்சி எனப்படும் பிட்காயின் பரிவர்த்தனைகளுக்கு தடை-சீனா அறிவிப்பு..!!

பெய்ஜிங்: கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகளுக்கு சீன மத்திய வங்கி தடை விதித்துள்ளது. உலகளாவிய வர்த்தக முறையில் கிரிப்டோகரன்சி என அழைக்கப்படும் பிட்காயின் உள்ளிட்ட டிஜிட்டல் கரன்சிகளின் புழக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த டிஜிட்டல் கரன்சிகளை பல்வேறு சர்வதேச வணிக நிறுவனங்களும் ஏற்றுக் கொண்டு வருகின்றன. இந்த நிலையில், பிட்காயின் உள்ளிட்ட அனைத்து கிரிப்டோகரன்சிகளும் அரசாங்கத்தால் வெளியிடப்படும் -பணம் இல்லை என்பதால் அதனை சந்தையில் புழங்க முடியாது என்றும் சீனாவின் மத்திய வங்கி தெரிவித்துள்ளது. கிரிப்டோகரன்சி தொடர்பான அனைத்து […]Read More

தமிழகத்தில் மேலும் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் டிஜிபியாக பதவி உயர்வு

சென்னை: காவல் துறையில் உச்ச பதவியான டிஜிபி பதவிக்கு தமிழக காவல்துறை முன்னாள் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், இந்நாள் ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட 5 ஏடிஜிபிக்களுக்கு பதவி உயர்வு அளிக்க நிலை உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏற்கெனவே சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திர பாபுவுடன் சேர்த்து 11 டிஜிபிக்கள் உள்ளனர். (இந்த மாத இறுதியில் ஒருவர் ஓய்வு பெற உள்ளார்) தற்போது 1990 ஆம் ஆண்டு பேட்ச் ஏடிஜிபிக்களாக உள்ள ஐபிஎஸ் அதிகாரிகள் 5 பேர் […]Read More

வெள்ளை மணல் தேசிய பூங்காவில் பழமையான மனித காலடி தடங்கள் கண்டுபிடிப்பு..!

வெள்ளை மணல் தேசிய பூங்காவில் இருந்து பழமையான மனித காலடி தடங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்காவின் வடக்கிலுள்ள நியூ மெக்சிகோ பகுதியில் தொல்பொருள் ஆராய்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அப்பொழுது அங்கு உள்ள வெள்ளை மணல் தேசிய பூங்காவின் அருகில் இருக்கும் ஏரிக்கரையில் புதைபடிவ காலடி தடங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இவை குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரின் காலடி தடமாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக இந்த கண்டுபிடிப்பானது நெடுங்காலமாக சந்தேகத்தில் இருக்கும் இடம் பெயர்வுக்கான தீர்வை […]Read More

error: Content is protected !!