முதல்வன் பட பாணியில் அதிரடியாக இறங்கிய அண்ணாமலை – நிர்வாகிகள் அதிர்வு ..!

 முதல்வன் பட பாணியில் அதிரடியாக  இறங்கிய அண்ணாமலை –  நிர்வாகிகள் அதிர்வு ..!

பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பின்னர் பல்வேறு நிர்வாகிகள் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்கின்றனர் . மேலும் பல்வேறு சார்பு அணிகளின் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெறுகிறது. பாஜக தலைவர் அண்ணாமலையும் முன்னாள் தலைவர்கள் முக்கிய நிர்வாகிகள் என ஒவ்வொருவரையும் நேரில் சென்று சந்தித்து வருகிறார்.கட்சி அலுவலகத்தில் இருக்கும் நேரங்களில் மாவட்ட நிர்வாகிகள் அவரை சந்திக்க வரும்போது சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில் பாஜகவின் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் கடந்த வாரம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு யார் யாரெல்லாம் பங்கேற்பார்கள் என்ற முக்கிய நிர்வாகிகளின் பட்டியல் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் எல்லாம் ஆலோசனை கூட்டத்திற்கு வருவார்கள் என்று தொழில்நுட்ப பிரிவு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் அண்ணாமலை ஆலோசனைக் கூட்டத்திற்கு வந்துள்ளார். ஆனால் பட்டியலில் உள்ள பாதிப்பேர் ஆலோசனைக் கூட்டத்திற்கு வரவில்லை. இதைப்பார்த்த அண்ணாமலை எத்தனை பேர் வரவில்லை? ஏன் வரவில்லை? என்று விசாரித்துள்ளார். சரியான காரணங்கள் இல்லாத யாரெல்லாம் வரவில்லையோ அவர்கள் எல்லாம் வீட்டிலேயே இருக்கக் சொல்லிவிடுங்கள், புதிய நபர்களை ஆர்வம் உள்ள நபர்களை நாம் தேர்வு செய்து பணி வழங்கலாம் என கூறியுள்ளார்.

இதைக் கேட்ட நிர்வாகிகள் அதிர்ந்துபோய் பின்னர் இதுபோன்று இனிமேல் நடைபெறாது என கூறியுள்ளனர். நிர்வாகிகள் வரவில்லை என்றதும் முதல்வன் படத்தில் வரும் காட்சிகள் அண்ணாமலை நடந்து கொண்டதாக தொழில்நுட்ப பிரிவு தெரிவித்தனர். எனவே இனி வரும் ஆலோசனை கூட்டத்தில் எல்லோரும் பங்கேற்க உத்தரவிட்டுள்ளதாகவும் கூறினர்.

News Express Tamil

Related post