நடிகர் பிரபு காங்கிரஸ் கட்சியில் இணைவார்: காங்கிரஸ் கட்சியில் இணையத்தில் தகவல்

 நடிகர் பிரபு காங்கிரஸ் கட்சியில்  இணைவார்: காங்கிரஸ் கட்சியில் இணையத்தில் தகவல்

தமிழகத்தில் ஒரு காலத்தில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி திராவிட கட்சிகளின் எழுச்சிக்கு பிறகு வீழ்ச்சியை சந்தித்தது. அக்கட்சி திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைத்தே தேர்தலை சந்திக்கும் நிலையில் கடந்த 50 வருடங்களாக இருந்து வருகிறது. மேலும், தமிழக காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி மோதல் தொடர்ந்து வருவதாகவும் அது அந்த கட்சியின் தலைமைக்கு பெரும் தலைவலியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே தமிழகத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவதற்காக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தீவிர முயற்சியில் இறங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தமிழக காங்கிரஸிலும் புது ரத்தம் பாய்ச்சும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.. அந்த வகையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகனும் நடிகருமான பிரபு காங்கிரஸ் கட்சியில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சென்னை வரும்போது நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வீட்டிற்கு சென்று அவரின் திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்து பிரபுவை கட்சியில் இணைத்துக் கொள்ளப் போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் காங்கிரஸ் கட்சியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

News Express Tamil

Related post