கேரளாவுக்கு கடத்த முயன்ற 5 டன் ரேஷன் அரிசி,மினி லாரி பறிமுதல் : ஒருவர் கைது

 கேரளாவுக்கு கடத்த முயன்ற 5 டன் ரேஷன் அரிசி,மினி லாரி பறிமுதல் : ஒருவர் கைது

பொள்ளாச்சி அடுத்துள்ள சேத்துமடை புங்கன் ஓடை பாலம் பகுதியில் ஆனைமலை காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ் கண்ணா தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர் இதையடுத்து அவ்வழியே வந்த 407 வாகனத்தை ஓட்டி வந்த நபர் முன்னுக்குப்பின் பேசியதால் சந்தேகம் அடைந்த போலீசார் வாகனத்தை சோதனை செய்த பொழுது அதில் தமிழக அரசு பொது மக்களுக்குவழங்கும் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது வாகன ஓட்டி வந்த நபரை பிடித்து விசாரித்ததில் தாத்தூர் பகுதியை சேர்ந்த ஜெகநாதன் (34) என்பதும் இவர் கேரளாவிற்கு கடத்த முயற்சி செய்தது தெரியவந்தது, துணை கண்காணிப்பாளர் விவேகானந்தன் உத்தரவின்படி ஆய்வாளர் ரமேஷ் கண்ணா ஜெகநாதன் ஒட்டி வந்த 407 வாகனத்தை பறிமுதல் செய்து கைது செய்தனர், பறிமுதல் செய்யப்பட்ட வாகனம் மற்றும் ஜெகநாதனை உணவு கடத்தல் தடுப்புபிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

News Express Tamil

Related post

error: Content is protected !!