சிமெண்ட் லாரியில் மறைத்து வைத்திருந்த 40 லட்சம் ரூபாய் பணம், 50 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் : ஓட்டுனரை கைது

 சிமெண்ட் லாரியில் மறைத்து வைத்திருந்த 40 லட்சம் ரூபாய் பணம், 50 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் : ஓட்டுனரை கைது

தாராபுரத்தில், காவல்துறையினர் வாகன சோதனையின்போது, சிமெண்ட் லாரியில் மறைத்து வைத்திருந்த 40 லட்சம் ரூபாய் பணம், 50 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்த போலீசார் லாரி ஓட்டுனரை கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் ,தாராபுரத்தில், கொரோனா தொற்று காரணமாக தமிழக அரசு ஊரடங்கு அறிவித்துள்ள நிலையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று காலை தாராபுரம், பொள்ளாச்சி சாலையில் உள்ள, பெஸ்ட் நகர் பகுதியில் வாகன சோதனையின்போது, KA 55 A 1102 கர்நாடக மாநிலத்தைச் சார்ந்த சிமெண்ட் மூட்டை ஏற்றிவரும் கன்டெய்னரில் 40 லட்சம் ரொக்கப் பணமும், 50 கிலோ ரேஷன் அரிசியும் தாராபுரம் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது . இதனைத்தொடர்ந்து முதல்கட்ட விசாரணையில் லாரி ஓட்டுநர் ராகவன் (வயது 54), இவர் கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர் என்றும், கரூரில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதிக்கு சிமெண்ட் முட்டை ஏற்றிச்செல்லும் லாரியில் ஓட்டுனராக பணிபுரிவது தெரியவந்துள்ளது .

ராகவனுக்கு தெரிந்த நபரிடமிருந்து கோழிக்கோடுக்கு தன் அண்ணன் மகன் திருமணத்திற்காக இப்பணத்தை ஒப்படைக்குமாறு கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், பணத்தை வாங்கி வந்ததாக தெரிவித்தார் .

இதனைத் தொடர்ந்து ரூபாய் 40 லட்சம் ரூபாய் பணத்தை கோவை மண்டலத்துக்கு உட்பட்ட வருமான வரி துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படும் என்று தாராபுரம் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

News Express Tamil

Related post