டெய்லர் வீட்டில் கதவை உடைத்து 30 பவுன் நகை, ரூ.3.22 லட்சம் பணம் திருட்டு: கோவையில் தொடரும் கொள்ளை சம்பவம்-பீதியில் மக்கள்..!

 டெய்லர் வீட்டில் கதவை உடைத்து 30 பவுன் நகை, ரூ.3.22 லட்சம் பணம் திருட்டு: கோவையில் தொடரும் கொள்ளை சம்பவம்-பீதியில் மக்கள்..!

கோவையில் டெய்லர் வீட்டில் கதவை உடைத்து 30 பவுன் நகை, ரூ.3.22 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

கோவை குனியமுத்தூர் பிருந்தாவன் நகரை சேர்ந்தவர் முபாரக் அலி(48). டெய்லர் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் கரும்புக்கடையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர் நேற்று வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த உடைமைகள் சிதறிக் கிடநதன. பீரோவில் வைக்கப்பட்டிருந்த 30 பவுன் நகை, வாட்ச் மற்றும் ரூ.3.22 லட்சம் கொள்ளை போனது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த முபாரக் அலி இது குறித்து குனியமுத்தூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குபதிவு செய்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகியுள்ளதா? என போலீசார் ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

News Express Tamil

Related post

error: Content is protected !!