தாயின் விளையாட்டால் 3 வயது குழந்தை உயிரிழப்பு : பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

 தாயின் விளையாட்டால்  3 வயது குழந்தை உயிரிழப்பு : பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

ரஷ்யாவில் Anna Ruzankina என்னும் தாய் தன்னுடைய 3 வயது Anastasia என்கின்ற குழந்தை அழுததால் 6 ஆவது மாடியிலிருந்து தூக்கி கீழே போடுவது போல் விளையாட்டாக மிரட்டியுள்ளார். இந்நிலையில் அந்த குழந்தையின் சட்டை கிழிந்ததால் சற்றும் எதிர்பாராதவிதமாக 6 ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்தது.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த Anna கீழே விழுந்த குழந்தையை தூக்குவதற்காக லிஃப்டில் சென்றுள்ளார். அதன்பின் இறந்த குழந்தையை தூக்கி கொண்டு மீண்டும் லிஃப்டில் சென்றுள்ளார். இந்தக் காட்சிகள் பதிவாகிய வீடியோவை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.இதனையடுத்து குழந்தையை அவருடைய தாய் கொன்றிருக்கலாம் என்னும் சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறையினர் Anna வை கைது செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இவருடைய குற்றம் நிரூபிக்கப்பட்டால் Anna விற்கு 21 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்று கருதப்படுகிறது.

News Express Tamil

Related post