போஸ்கோ வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டு சிறை: பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 2 லட்சம் நிதி – கோவை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

 போஸ்கோ வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டு சிறை: பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 2 லட்சம் நிதி – கோவை  சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

கோவையில் கடந்த 2019 ஆம் ஆண்டு 7 வயது சிறுமியின் பெண் உருப்பிலிருந்து ரத்தம் வரவே, அச்சமடைந்த பெற்றோர் மருத்துவமனையில் சிறுமியை அனுமதித்தனர். அப்போது, சிறுமி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டது தெரியவந்தது. தகவலறிந்த கோவை மாநகர் மேற்கு அனைத்து மகளிர் காவல்துறையினர், போக்ஸோ பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், கோவை உக்கடம் பகுதியை சேர்ந்த மீன் பிடிக்கும் வேலை செய்து வரும் செந்தில் பிரபு என்பவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தததையடுத்து, செந்தில்குமார் மீது போக்ஸோ பிரிவு உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கு கோவை போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், செந்தில் பிரபுவுக்கு, 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூபாய் 20 ஆயிரம் அபாதரம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ரூபாய் இரண்டு லட்சம் இழப்பீடும் வழங்கவும் போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, செந்தில் பிரபு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சிறை தண்டனை பெற்ற செந்தில்குமார் மீது கோவை மாநகர காவல் நிலையத்தில் 10 க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளது.

News Express Tamil

Related post

error: Content is protected !!