மாநிலங்களவை உறுப்பினராக மீண்டும் தேர்வாகிறார் நிர்மலா சீதாராமன்..!!
மருதமலை முருகன் கோவிலில் இன்று தைப்பூச தேரோட்டம்-பக்தர்களுக்கு அனுமதி இல்லை..!

கோவை பக்கம் உள்ள மருத மலையில் பிரசித்தி பெற்ற அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக் கோவில் உள்ளது .இங்கு இந்த ஆண்டு தைப்பூசத் திருவிழா கடந்த 11-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.தினமும் காலை மற்றும் மாலையில் சிறப்பு பூஜைகள் யாகசாலை வேள்வி சுவாமி திருவீதி உலா போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. தைப்பூச விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைப்பூச தேரோட்டம் இன்று ( செவ்வாய்க்கிழமை) காலையில் நடந்தது.இதையொட்டி நேற்று மாலை தங்க மயில் வாகனத்தில் சந்தனகாப்பு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளினார் சுப்பிரமணிய சுவாமி வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் நிகழ்ச்சி இன்று காலை 7 மணிக்கு திருக்கல்யாண மண்டபத்தில் நடந்தது.

அதைத்தொடர்ந்து காலை 9 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானையுடன் வெள்ளை யானை வாகனத்தில் திருவீதி உலா வந்தார் .10:40 மணிக்கு தைப்பூச தேரோட்டம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட சிறிய தேரில் சுப்பிரமணியசாமி வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளினார் .கோவில் சிவாச்சாரியார்,மற்றும் அங்கு வசிக்கும் ஆதிவாசிகள் தேரைவடம் பிடித்து இழுத்தனர். கொரோனா பரவலை தடுக்கும் வகையில் இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதிவழங்கப்படவில்லை. நாளை புதன்கிழமை சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மாலை 5 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் , குதிரை வாகனத்தில் சுவாமி வள்ளி தெய்வானையுடன் எழுந்தருள்கிறார். 20-ந்தேதி மகா தரிசனம் ,மாலை 4மணிக்கு கொடி இறக்குதல், 21ஆம் தேதி வசந்த உற்சவ திருவிழாவுடன் விழா நிறைவடைகிறது.இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.தைப்பூசத் திருவிழாவுக்கு பக்தர்கள் அனுமதி இல்லாததால் பக்தர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்தனர்.அவர்கள் மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் மலை அடிவாரம் படிக்கட்டில் தீபம் ஏற்றி வழிபட்டு சென்றனர்.