மாநிலங்களவை உறுப்பினராக மீண்டும் தேர்வாகிறார் நிர்மலா சீதாராமன்..!!
கோவையில் எகிறும் கொரோனா: ஒரே நாளில் 3.653 பேருக்கு தொற்று-2 பேர் பலி..!

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று சற்று வேகமாக அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் 3,390 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. நேற்று ஒரே நாளில் கோவையில் 3,653 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுடன் சேர்த்து இதுவரை 2 லட்சத்து 79 ஆயிரத்து 225 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 46 வயது பெண், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 64 வயது முதியவர் ஆகிய 2 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். கோவை மாவட்டத்தில் இதுவரை 2,542 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். கோவை அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த1,183 பேர் குணமடைந்து வீடு திரும்பினர் .இவர்களுடன் சேர்த்து இதுவரை 2 லட்சத்து 58 ஆயிரத்து 447 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 18 ஆயிரத்து 236 பேர் சிகிச்சையில் உள்ளனர்…